வெறும் வெள்ளைத்தாள் ரூ.12 கோடிக்கு ஏலம் - அப்படி என்ன இருக்கு தாள்ல?
வெள்ளை தாள் ஓவியம் ஒன்று 12 கோடிக்கு ஏலத்தில் வரவுள்ளது.
வெள்ளை நிற கேன்வாஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ரேமென் என்ற ஓவியர் வெள்ளை நிற ஓவியங்கள் வரைவதில் வல்லவர் என்று கூறப்படுகிறது.
1970ம் ஆண்டு ஜெனரல் 52″ x 52″ என்ற தலைப்பில் ராபர்ட் ரேமென் வரைந்த வெள்ளை நிற கேன்வாஸ் ஒன்று ஜெர்மனியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1.5 மில்லியன்
தற்போது இந்த ஓவியம் ஏலத்திற்கு வர உள்ள நிலையில் இதன் ஆரம்ப விலை 1.5 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 12.70 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது பார்க்க வெற்று காகிதம் போல் தோன்றினாலும், வெள்ளை பற்சிப்பியால் வரையப்பட்டுள்ளது. இது எண்ணெய் மற்றும் நிறமிகளுடன் கலந்த கண்ணாடி தூசியை உள்ளடக்கிய ஒரு ஊடகமாகும். இது வெற்று தாளாக இருந்தாலும் இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக்கலைஞர் கூறுகிறார்.
ராபர்ட் ரேமெனின் படைப்புகள் விமர்சனத்தை பெற்றாலும் சில கோடிக்கு ஏலத்தில் சென்று அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதற்கு முன்னர் நியூயார்க்கில் அருங்காட்சியகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.