தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
Thamizhaga Vetri Kazhagam
By Fathima
தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே மனு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த மனுவில் விசில், ஆட்டோ போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் கணக்குகளை தாக்கல் செய்த காரணத்தினால் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தவெக தனது முதல் தேர்தலிலேயே பொதுச்சின்னத்துடன் களமிறங்குவதால், கட்சித்தொண்டர்கள் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.
