பாபா வாங்காவே கணித்துள்ளாரா? 2025 எந்த ராசிக்கு அமோகமாக இருக்கும்!
ராசி குறித்து பாபா வாங்கா கணித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. குறிப்பாக இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், டயானா மரணம், ரஷ்யா-உக்ரைன் போர் என பல அடங்கும்.
ராசி கணிப்பு
அந்த வகையில் இந்த ஆண்டு சில ராசிகளுக்கு அமோகமாக இருக்கும் என்று இவர் கணித்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், உலகம் முழுவதும் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள், தங்களது வாழ்வில் என்ன கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ அது இந்த ஆண்டில் கிடைக்கும்.
கடக ராசிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இது இருக்கும் என்றும், கடந்த காலங்களில் அவர்கள் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது அனுபவிப்பார்கள். நிதிப் பாதுகாப்பை அடைவார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் 2025ல் சிறப்பான மாற்றங்களையும் எதிர்பாராத வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம். சவாலை எதிர்கொண்டு சாதனை படைக்க ஏற்ற ஆண்டாக இருக்கும் என கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பாபா வங்கா இதனைக் கணித்துள்ளாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவல் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.