இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் கிராமம் இதுதான் - எந்த மாநிலத்தில் தெரியுமா?
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் மாநிலம் பற்றிய தகவல்.
டோங் கிராமம்
இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம். இம்மாநிலத்தின் அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள 'டோங்' என்ற கிராமத்தில் தான் சூரியன் முதலில் உதயமாகிறது.
டோங், கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில், ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஒரு கிராமமாகும். மேலும், இந்த கிராமம் சீனாவுக்கும், மியான்மருக்கும் இடையில் அமைந்துள்ளது.
ஒரு மணி நேரம்
பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இதற்கு மேலும் சிறப்பை கூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த அழகான ஊர் இந்தியாவின் ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு நாட்டின் மற்ற பகுதிகளை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதிக்கிறது. அதேபோல், சூரியன் அஸ்தமனம் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆகிவிடும். இதன் காரணமாகவே இப்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது.