இந்தியாவில் அதிகளவு பெட்ரோலை பயன்படுத்தும் மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் நுகர்வு ஒரே மாதிரியாக இல்லை.
சில மாநிலங்கள் தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாக பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம் மற்ற மாநிலங்களில் குறைவாகவும் பயன்படுத்துகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் அதிகளவு பெட்ரோலை பயன்படுத்தும் மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
2024-25 நிதியாண்டிற்கான பகுப்பாய்வு மையத்தின்(PPAC) அறிக்கையின்படி, இந்தியாவில் 100 பேருக்கு சராசரியாக தினமும் 10.4 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. அங்கு 100 பேருக்கு தினமும் 52.4 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகிறது. இது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம்.
புதுச்சேரி 41 லிட்டருடன் இரண்டாவது இடத்திலும், சண்டிகர் 37.8 லிட்டருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது மற்றும் தனியார் வாகன பயன்பாடு அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
மேலும், மிகக் குறைந்த பெட்ரோல் நுகர்வு கொண்ட மாநிலமாக பிகார் உள்ளது. அங்கு 100 பேருக்கு வெறும் 3.3 லிட்டர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் 100 பேருக்கு 5.1 லிட்டர் பெட்ரோல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்படுவது இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டீசல் நுகர்வில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதலிடத்தில் உள்ளது. அங்கு 100 பேருக்கு 144 லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல் லடாக் பகுதியில் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் கனரக வாகன பயன்பாடு காரணமாக 111 லிட்டர் டீசல் நுகர்வு பதிவாகியுள்ளது.