தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதி எது? அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!

Tamil nadu BJP Narendra Modi K. Annamalai
By Thahir Jul 23, 2023 06:27 PM GMT
Report

தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளாரா என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசு தடுக்கவில்லை

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் தமிழக அரசு செயல்படுகிறது.

Which seat is PM Modi contesting in Tamil Nadu?

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்கிறது தமிழக அரசு தடுக்கவில்லை. மின்கட்டணம் உயர்வு மூன்று முறை உயர்ந்துள்ளது.

இந்தியாவின் எங்குமே 27 மாதத்தில் மூன்று முறை உயர்த்தியதாக வரலாறு கிடையாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

மோடி எங்கு போட்டியிடுகிறார்?

அதற்கான எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை. அவரது நோக்கம் எல்லாம் மோடிக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கம் அதனால் தான் மத்திய அரசு திட்டங்கள் இவ்வளவு வந்த போதும் அது பொதுமக்களுக்கு சென்று சேரும் போது ஊழலோடு தான் சென்று சேர்கிறது அதற்கு காரணம் மாநில அரசு தான்.

Which seat is PM Modi contesting in Tamil Nadu?

தமிழகத்தில் பிரதமர் போட்டியிடுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. எதிர்க்கட்சிகள் முற்றிலும் முரண்பாடான கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளன. உண்மையான இந்தியா உண்மையான பாரதம் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.