இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரம்.., எது தெரியுமா?

Mumbai
By Yashini Mar 19, 2026 05:38 PM GMT
Report

இந்தியாவின் பெருநகரங்களில் வாழ்வது நாளுக்கு நாள் அதிக செலவாகி வருகிறது.

வீட்டு வாடகை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால், பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

உலக நகரங்களின் வாழ்க்கைச் செலவை ஆய்வு செய்யும் நம்பியோ (Numbeo) அமைப்பு 2026ஆம் ஆண்டின் நிலவரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரம்.., எது தெரியுமா? | Which Is The Most Expensive City To Live In India

அதன்படி, இந்தியாவில் ஒரு தனிநபர் வாடகையை தவிர்த்து மாதம் சுமார் ரூ.27,300 செலவிட வேண்டியுள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரம் எது என்பது குறித்த பலருக்கும் தெரியாது.

அதன்படி, இந்த பட்டியலில் மும்பை நகரம் மிகவும் அதிக செலவான நகரமாக முதலிடத்தில் உள்ளது.  

இந்தியாவில் வசிக்க அதிகம் செலவாகும் நகரம்.., எது தெரியுமா? | Which Is The Most Expensive City To Live In India

அங்கு ஒரு நபருக்கு வாடகை தவிர்த்து மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை செலவாகிறது.

இதற்கு அடுத்தபடியாக டெல்லி, புனே, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை 6வது இடத்தில் உள்ளது, அங்கு ஒரு நபருக்கு ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது.

அனைத்து பெருநகரங்களிலும் கொல்கத்தா மிகவும் குறைந்த செலவான நகரமாக கருதப்படுகிறது. அங்கு ஒரு நபருக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவாகும்.