உலகின் மிகப்பெரிய நகரம்..., எங்கு உள்ளது தெரியுமா?
உலகின் மிகப்பெரிய நகரமாக இருக்கும் இங்கு மக்கள் தொகை 3.2 கோடிக்கும் மேல் உள்ளது.
இங்குள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
இந்த நகரம் சீனாவில் உள்ளது. அதாவது சீனாவின் சோங்கிங், உலகின் மிகப்பெரிய மெகாசிட்டி ஆகும்.
அதாவது ஆஸ்திரியாவைப் போன்ற பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு இந்த நகரம் ஒரு அற்புதமான உதாரணமாகும்.
31,815 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ள சோங்கிங் ஒரு பெரிய நகரம் மட்டுமல்ல, செங்குத்தான நகரமும் கூட.
சோங்கிங் நகரமானது, சீனாவின் முக்கிய பொருளாதார மற்றும் போக்குவரத்து மையமாக உள்ளது.
இது உயர்ந்த மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
தென்கிழக்கு சீனாவில், யாங்சே ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள இந்த நகரத்தில் பல கட்டடங்கள், பாறைகளில் அமைந்திருப்பதைப் போல் காட்சியளிக்கிறது.
சோங்கிங் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் நகரம் விரைவாக நவீனமயமாக்கப்பட்டது.
நகரின் மிக உயரமான இடம் கூட நடந்து செல்பவர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இங்கு பல தெரு உணவிடங்கள் உள்ளன.
இந்த நகரமானது வுலிங் மற்றும் டபா மலைகள் போன்ற பல மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் இயற்கை அழகையும் கொண்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் யாங்சே ஆற்றின் குறுக்கே கேபிள் காரில் சென்று, அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்க்கலாம்.
மேலும், மூன்று கோர்ஜஸ் அருங்காட்சியகத்தை அடைய, பார்வையாளர்கள் ஒரு கட்டடத்தின் வழியாக மோனோ ரயிலில் சவாரி செய்கின்றனர்.
46,000 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள ஹோங்யா குகை, சோங்கிங்கில் ஒரு கலாச்சார சின்னமாகவும், முக்கிய ஈர்ப்பாகவும் இருக்கின்றன.
இந்த நகரத்தின் வடக்கில் டாபா மலைகள், தென்கிழக்கில் வுலிங் மலைகள், கிழக்கில் வு மலைகள் மற்றும் தெற்கில் டாலோ மலைகள் உள்ளிட்ட பல மலைத் தொடர்களுக்கும் தாயகமாக உள்ளது.