இந்தியாவின் 1 ரூபாய்க்கு ரூ.12,000 கொடுக்கும் நாடு.., எது தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வரும் நிலையில், ஈரானின் நாணயம் உலகிலேயே மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஈரானின் நாணயம் "ஈரானிய ரியால்" என்று அழைக்கப்படுகிறது.
ஜனவரி 25ஆம் தேதி நிலவரப்படி, 1 இந்திய ரூபாய் 11,719.53 ஈரானிய ரியாலுக்கு சமமாக உள்ளது.
அரசியல் நிலையற்ற சூழ்நிலை, நீண்டகால பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர்ச்சியான பணவீக்கம் காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஈரானிய ரியாலின் மதிப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக பல நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த தடைகள் மேலும் கடுமையானதால், ரியாலின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது ஈரானில் பணவீக்கம் வரலாற்றிலேயே மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சாதாரண மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஈரானில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.
உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் பலவீனமாக இருந்தாலும், ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ரூபாய்க்கு அதிக மதிப்புள்ளது.
அதனால் குறைந்த பட்ஜெட்டில் வெளிநாட்டு பயணம் செய்ய நினைப்பவர்கள், ஈரான் போன்ற நாடுகளை ஒரு தேர்வாக எடுத்துக் கொள்ளலாம்.