இந்த நாட்டில் கரன்சியே கிடையாதாம்.. அப்போ பொருள் வாங்க என்ன செய்வாங்க தெரியுமா?
ஒரு நாட்டில் கரன்சியே இல்லை என்றால் நம்ப முடிகிறதா?
மாண்டெனேக்ரோ
தென் கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடு மாண்டெனேக்ரோ. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 6.17 லட்சம் தான். இந்த நாட்டில் கடந்த பல காலமாக சொந்தமாக கரன்சி எதுவும் இல்லை.
2002ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் கரன்சியான யூரோவை தனது அதிகாரப்பூர்வ நாணயமாக ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் சொந்த நாணயம் இல்லாத நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. 1990களில் மாதாந்திர பணவீக்க விகிதம் 50% ஆக இருந்தது.
நோ.. சொந்த கரன்சி
அதே ஆண்டில் ஜூன் மாதத்தில் 100% ஐ எட்டியது. இது கடுமையான மற்றும் நீண்டகாலப் பணவீக்கத்திற்கு வழிவகுத்தது. எனவே பணவீக்கத்தைச் சமாளிக்க 1999ம் ஆண்டு முதல் ஜெர்மனி நாட்டின் நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாண்டினீக்ரோ ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும் இல்லை.
அவர்களுக்கு ஒப்பந்தமும் இல்லை. அவர்கள் தன்னிச்சையாகவே இந்த கரன்சியை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையான ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த ஆரம்பித்தனர். இது மாண்டெனேக்ரோ பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவியது.
மேலும், அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை எளிதாக்கியது. இருப்பினும், கடந்த காலங்களில் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.