எங்கே போனாலும் நயன்தாரா பற்றியே கேட்குறாங்க - மாமியார் குமுறல்
எங்கே போனாலும் நயன்தாரா குழந்தை பெற்ற விவகாரம் பற்றியே தான் கேட்குறாங்க என அவரது பெரிய மாமியார் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரியவந்தது.
விசாரணை குழு அமைப்பு
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விக்னேஷ் - நயன்தாரா தம்பதி அப்படியென்றால் திருமணத்துக்கு முன்பே கடந்த ஆண்டே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்திருக்கிறார்கள்.
அதற்கு பிறகுதான் அவர்கள் திருமணமே செய்திருக்கிறார்கள். நயன்தாரா, விக்னேஷ் சிவனின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
மருத்துவ ரீதியாக குழந்தை பெற முடியாதவர்கள்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெறலாம் என வாடகை தாய் சட்டம் சொல்கிறது.
ஆனால் அந்த சட்டத்தை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காற்றில் பறக்க விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், நயன்தாரா இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
அத்துடன் ஷாருக்கான் ஜோடியாகவும் ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இதனால் இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல், பணம், புகழுக்காக வாடகை தாயை நயன்தாரா நாடியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியையும் வாடகை தாய் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தையும் விசாரிக்க தமிழக அரசு சார்பில் 4 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா மாமியார் குமுறல்
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற விக்னேஷ் சிவனின் பெரியம்மா பேசுகையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே ஏதேனும் குறையிருக்கிறதா என்று தெரியவில்லை அப்படி இருந்தால் கூட பிரச்சனை இல்லை என்றார்.
நெறியாளர் வெளியில் தலை காட்ட முடியவில்லை என்று சொல்கிறீர்கள் அந்த அளவு அவமானமாக உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவரது பெரிய மாமியார் பிரேமா, உங்களை கூப்பிடலையா? அவுங்கள வர சொல்லுங்க ஒரு முறை பார்க்க வேண்டும்.
விக்னேஷ் திருச்சி லால்குடியில் பிறந்ததால் அவரை பார்க்க வேண்டும் என்று அனைவரும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் வெளியில் எங்கே போனாலும் நயன்தாரா பற்றி கேட்பது எங்களுக்கு மன வருத்தமாக இருக்கிறது என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil