தப்பித்த மகிந்த ராஜபக்சே தங்கியிருப்பது எங்கே? வெளியான முக்கிய தகவல்..!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பெறுப்பேற்று அதிபரும்,பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் அழுத்தம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்க தொடங்கினர்.
இதையடுத்து கலவர பூமியாக காட்சியளித்தது இலங்கை.இந்நிலையில் மகிந்த ராஜபக்சே வீட்டிற்கு தீ வைத்தனர் போராட்டக்காரர்கள்.
இதன் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் திரிகோண மலையில் உள்ள கப்பல் படை தளத்தில் தஞ்சம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்த திரிக்கோண மலை கப்பல் படை தளம் போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது. இலங்கையில் வடக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த திரிகோண மலை கப்பற்படை.
ஆழம் அதிகமுள்ள இந்த துறைமுகம் போரக்கப்பல்கள் மற்றும் நீர்முழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்க சரியான இடமாக தேர்வு செய்யப்பட்டது.

உலக போர் 1 மற்றும் உலக போர் 2 நடந்த கால கட்டத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் தனது நேவியை இயக்குவதற்கு முக்கிய படைத்தளமாக திகழ்ந்தது.
இந்த திரிகோண மலை கப்பற் படை தளம் தான். பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பிறகு இலங்கை அரசு வசம் வந்த இந்த திரிகோண மலை துறைமுகம் மிகப் பெரிய கப்பற் படை தளமாக மாற்றப்பட்டது.
மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் இந்த திரிகோண மலை கப்பற் படையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் இங்கு தான் தங்கியிருக்கிறார்கள் என்ற எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.