கோடை காலத்திலும் பனி பொழியும் அதிசயம்; உலகின் கடைசி சாலை எங்கே இருக்கு தெரியுமா?

Norway Europe
By Swetha Mar 07, 2024 12:49 PM GMT
Report

 உலகின் கடைசி சாலை இங்கே முடியும் என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

கடைசி சாலை

மக்கள் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சாலை தான் அடித்தளமாக இருக்கிறது. மண்ணாக இருந்த இடங்களை ரோடு போட்டு சாலையாக அமைத்துள்ளனர்.

கோடை காலத்திலும் பனி பொழியும் அதிசயம்; உலகின் கடைசி சாலை எங்கே இருக்கு தெரியுமா? | Where Is The World Last Road

ஆனால் அந்த சாலை எங்கே ஆரம்பித்து, எங்கே முடிகிறது என்று தெரியாது. அந்த வகையில் உலகின் கடைசி சாலை எங்கே இருக்கிறது என்று புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள E-69 நெடுஞ்சாலை நார்வேயில் அமைந்துள்ளது. இதுவே உலகின் கடைசி சாலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய சாலையை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்து ஒருமுறையாவது நடக்க பலர் விரும்புவதாக தெரியவந்துள்ளது.

அதாவது பூமத்தியரேகைக்கு மேலே அணிந்துள்ள இந்த சாலை வடக்கு ஐரோப்பாவில் உள்ள Nordkapp ஐ நார்வேயில் இருக்கும் Oldafevoord கிராமத்துடன் இணைக்கிறது.

போராடிய மக்கள்; சாலைக்கு ‘நிர்மலா சீதாராமன்’ பெயர் - பலகையை அகற்றிய அதிகாரிகள்

போராடிய மக்கள்; சாலைக்கு ‘நிர்மலா சீதாராமன்’ பெயர் - பலகையை அகற்றிய அதிகாரிகள்

எங்கே  தெரியுமா?

சுமார் 129 கி.மீ. தூரத்தை கொண்ட இந்த சாலையில் மிக நீளமான சுரங்கப்பாதை ‘நார்த் கேப்’ ஆகும். இந்த நார்த் கேப் சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளதால் முடிந்த வரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும். எனவே இதை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.

E- 69 highway

இந்த சாலையில் செல்ல சில விதிமுறைகள் உள்ளது, ஒருவேளை அதை பின்பற்றாவிட்டால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது. இந்த இடத்தில் காற்று அதி வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்திலும் பனி பொழிய கூடிய இடம் என கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்புகள் இந்த இடத்தில் வேலை செய்யாது என்பதால் இயற்கை சீற்றம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும், எனவே இங்கு யாரும் தனியாக செல்ல அனுமதி இல்லை.

worlds last road

1934 ஆம் ஆண்டு கட்ட தொடங்கிய இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகள் ஆனது. 1992 ஆம் ஆண்டு நிறைவு பெற்ற பிறகு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.