பிரதமர் மோடி படம் எங்கே? கலெக்டரை வறுத்தெடுத்த மத்திய அமைச்சர் நிர்மா சீதாராமன்

Smt Nirmala Sitharaman Government Of India
By Thahir Sep 03, 2022 05:17 PM GMT
Report

தெலங்கானாவில் உள்ள ரேசன் கடைக்கு ஆய்வுக்கு சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடையில் மோடி படம் இல்லாதததால் மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்தார்.

மோடியின் படம் ஏன் இல்லை?

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்திலுள்ள பீர்கூரில் ரேசன் கடையில் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.

அப்போது ரேசன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லை. இதனால் அவர் கோபமடைந்தார்.

பிரதமர் மோடி படம் எங்கே? கலெக்டரை வறுத்தெடுத்த மத்திய அமைச்சர் நிர்மா சீதாராமன் | Where Is The Picture Of Pm Modi Minister Nirmala

பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை? என அவர் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. மாநிலத்தில் பொதுமக்களுக்கு 1 ரூபாய்க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது.

இதன் பெரும்பங்கை மத்திய அரசு வகிக்கும்போது பிரதமரின் படத்தை வைக்க உங்களுக்கு ஏன் ஆட்சேபனை? என கேள்வி எழுப்பினார்.

மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்த நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து காமரெட்டி மாவட்ட கலெக்டரை அழைத்த நிர்மலா சீதாராமன் ரேசன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? என கேள்வி எழுப்பினார். இதற்கு கலெக்டர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலா சீதாராமன் அரை மணி நேரத்தில் விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.