Thursday, Jul 17, 2025

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்..! காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் எங்கே?

Tamil nadu Tamil Nadu Police Tirunelveli
By Thahir 2 years ago
Report

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் எங்கே?

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சார் ஆட்சியர் தரப்பு அதிகாரிகள் பாதிப்பு நடைபெற்ற காவல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மார்ச் 10, 11,12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

where-is-the-cctv-footage-of-the-police-station-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பழுது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிட்ட 3 நாட்களில் பதிவான காட்சிகளை பணிகள் நடைபெற்று வருகிறது.