கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? : கே.எஸ்.அழகிரிக்கு சீமான் கேள்வி

Seeman
By Irumporai May 22, 2022 10:28 AM GMT
Report

உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சீமான் கேள்விஎழுப்பியுள்ளார்

நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் காந்தியை கொன்ற போது எங்களது கண்களில் கண்ணீர் வந்தது.

ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே.

அதற்கு என்ன சொல்வது? நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாகஇருந்து யோசியுங்கள். உண்மைபுரியும்’ என பதிவிட்டுள்ளார்.