நாளை முதல் டோக்கன் - எப்போது கிடைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு..!!
பொங்கல் பரிசு தொப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி நாளை துவங்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு
வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான அறிவிப்பை நேற்று(06-01-2024) வெளியிட்டது.
அரசின் அறிவிப்பின்படி, அனைத்து நியாயவிலை கடைகளும் ரேஷன் அட்டைக்காரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் சமீபத்தில் வெள்ள மழை பாதிப்பை அடைந்த தென்மாவட்டங்களிலும் இந்த ரொக்கம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு தொகுப்பில் 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி, விலையில்லா வெட்டி சேலை போன்றவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பரிசு தொகுப்பிற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படும் என்றும், பரிசு தொகை வரும் 10-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக வரும் 12-ஆம் தேதி நியாயவிலை கடைகள் இயங்கும் என தெரிவித்துள்ளது.