குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC

Government of Tamil Nadu Chennai
By Thahir Mar 09, 2023 11:45 AM GMT
Report

கடந்தாண்டு ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது? 

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த கடந்தாண்டு ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது எனவும் விளக்கமளித்துள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC | When Will The Results Of Group 4 Exam

மேலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காக தெரிவிக்கப்படுகிறது.

குருப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.