இருமனம் ஒன்றுபட்டால் திருமணம்..சிம்புக்கு எப்போது திருமணம்? - டி.ஆர் பளீர் பேச்சு..!
இருமனம் ஒன்றுபட்டால் சிம்புவுக்கு திருமணம் என்று டி.ராஜேந்திரர் தெரிவித்துள்ளார். ஒரு தலை ராகம் மூலம் அறிமுகமானவர் டி.ராஜேந்திரர்.
அறிமுகம்
இவர் நடிகர்,இயக்குனர்,பாடகர்,என பன்முக திறமை கொண்ட இவரை அவரது ரசிகர் டி.ஆர் என்று அழைத்து வருகின்றனர்.
டி.ஆர் வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.25த்திற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
உடல்நலக்குறைவு
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவருமான டி.ராஜேந்திரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சிலம்பரசன் தனது தந்தைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,உயர் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறியிருந்தார்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்திரரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை
பின்னர் டி.ராஜேந்திரருக்கு மருத்துவ அறுவை சிகிச்சைகாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டி.ஆர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன் மகன் சிம்பு திருமணம் குறித்து பேசினார்.
சிம்புக்கு எப்போது திருமணம்?
அப்போது அவர்,இருமனம் ஒன்று பட்டால் திருமணம்.திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது. இருமனம் சேர்ந்தால் தான் திருமணம்.
எங்கள் வீட்டிற்கு நல்ல குணமுடைய திருமகள்,மருமகளாக வருவாள் என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.
மேலும் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தார்.