ஃபெஞ்சல் புயல்.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.30) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக,
புதுவையிலிருந்து சுமார் கிழக்கு - வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு - வடகிழக்கே 200 கிலோ மீட்டர்
அன்பில் மகேஷ்
தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும்,
மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.