ரஜினியை பிச்சைக்காரன் என நினைத்து ரூ.10 கொடுத்த பெண் - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்?
நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை பயணத்தின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். அண்மையில் கூட ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று திரும்பினார்.
அந்த வகையில் ஒருமுறை ரஜினிகாந்த் ஒரு கோயிலின் தூணின் அருகில் வழக்கம் போல் மேக்கப் இல்லாமல் எளிமையான உடையில் அமர்ந்திருந்தார். அவரின் ரசிகர்கள் கூட ஒரு 2,3 முறை உற்றுப்பார்த்தால் தான் அது ரஜினி என்பதே தெரியும்.
தானம் செய்த பெண்
அப்படி அமர்ந்திருப்பதை ஒரு 40 வயதை தாண்டிய பெண் ஒருவர் பார்த்துள்ளார். அவருக்கு அது ரஜினி என்பது தெரியவில்லை. அந்த பெண் ரஜினியிடம் சென்று 10 ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆனால் ரஜினிகாந்த் செய்தது 'அந்த 10 ரூபாயை சிரித்துக்கொண்டே வாங்கியுள்ளார்.
அந்த இடத்தில் சிறிது நேரம் இருந்த ரஜினிகாந்த் தனது காரில் ஏறச்சென்றார். அப்போதுதான் அந்த 10 ரூபாயை தானம் செய்த பெண் தான் தவறு செய்ததை உணர்ந்தார். உடனடியாக ரஜினியின் காருக்கு அருகில் ஓடிச் சென்று தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் அப்போதும் ரஜினிகாந்த் புன்னையுடனேயே அந்த பெண்ணிற்கு பதிலளித்துள்ளார். இதையெல்லாம் அங்கிருந்து பார்த்த ஒரு இளம்பெண் சொன்ன கதை இது.