ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசி எப்போது இந்தியாவுக்கு வருகிறது?

India Russia கொரோனா Sputnik
By mohanelango Apr 16, 2021 05:27 AM GMT
Report

இந்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசியை பயன்படுத்த அவசர கால அனுமதி வழங்கியிருந்தது. 

ஸ்புட்நிக் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளித்த 60வது நாடு இந்தியா. நீண்ட காலமாக வெளிநாடுகளின் தடுப்பூசிகளுக்கு இந்தியா அனுமதி மறுத்து வந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வந்தன. 

ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.

இதனால் மற்ற தடுப்பூசிகளையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. 

இந்நிலையில் ஸ்புட்நிக் தடுப்பூசி முதல் கட்டமாக இந்த மாத இறுதியில் இந்தியாவை வந்தடையும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

மேலும் மே மாதம் முதல் இந்தியாவிலே ஸ்புட்நிக் தடுப்பூசியை தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் மாதம் ஒன்றுக்கு 5 கோடி தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்நிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருப்பது இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.