வாட்ஸ் அப்பின் நடவடிக்கையால் டெலிகிராமுக்கு குவிந்து வரும் ஜாக்பாட்

whatsup telegram socialmedia
By Jon Jan 13, 2021 12:06 PM GMT
Report

வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்டால் மாற்று செயலிகளுக்கு பலரும் மாறி வருகின்றனர். வாட்ஸ் அப் மூலம் இனி பிரைவசி இருக்காது என்பது போல வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையால் கூறப்பட்டிருந்தது.

இதனால் அலறி போன மக்கள் இதற்கு மாற்றாக உள்ள செயலிகளான சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ் -அப்பில் ரகசிய தகவல் பகிர்வு சர்ச்சையால் டெலிகிராமில் உலகம் முழுவதும் 50 கோடி பயனாளர்கள் இணைந்தனர்.கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேருக்கு மேல் டெலிகிராமில் இணைந்தனர்.

டெலிகிராம் ஆப் 2013ல் நிகோலாய் வலேரியேவிச் துரோவ் மற்றும் பாவெல் துரோவ் ஆகியோரால் தொடங்கப்பட்டது. டெலிகிராம் Android, iOS, Mac மற்றும் Windows-இல் அணுக கிடைக்கும் ஒரு மெசேஜிங் ஆப் ஆகும். இந்த ஆப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரிக்கிறது.

டெலிகிராமில் உள்ள அனைத்து மெசேஜ்களும், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளும் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.