இந்த லிஸ்டில் உங்க போன் இருக்கா அப்போ நீங்க வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது - 2021 தான் கடைசி

Whatsapp Updates Users
By Thahir Sep 08, 2021 03:12 AM GMT
Report

வாட்ஸ் அப் வெளியிட்டிருக்கும் பட்டியலில் சாம்சங், எல்ஜி, ஹூவாவே, சோனி, அல்காடெல் உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்கள் இடம்பெற்றுள்ளன, இத்துடன் ஐ போன் SE, 6 எஸ் போன்ற மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இன்னும் 3 மாதங்களில் நடப்பு ஆண்டு முடிவடைய இருக்கிறது. தொழில்நுட்ப அளவில் சொல்வதென்றால் சில ஆண்டிராய்டு மற்றும் ஐபோன்களுக்கு மற்றுமொரு வாட்ஸ் அப் சப்போர்ட் நிறைவு பெற இருக்கிறது.

இந்த லிஸ்டில் உங்க போன் இருக்கா அப்போ நீங்க வாட்ஸ் அப் யூஸ் பண்ண முடியாது - 2021 தான் கடைசி | Whatsapp Update Users

நவம்பர் 1, 2021 முதல் எந்தெந்த மொபைல் சாதனங்களில் வாட்ஸ் அப் இயங்காது என்பதற்கான பட்டியலை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மாடல் போன்களில் நவம்பர் 1ம் தேதிக்கு பிறகு வாட்ஸ் அப் இயங்காது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஆண்டிராய்ட் 4.0.3 பதிப்பு அல்லது அதற்கும் குறைவான ஆண்டிராய்ட் போன்களிலும், ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான ஐபோன்களிலும் வாட்ஸ் அப் சேவை இனி கிடைக்காது.

வாட்ஸ் அப் வெளியிட்டிருக்கும் பட்டியலில் சாம்சங், எல்ஜி, ஹூவாவே, சோனி, அல்காடெல் உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்கள் இடம்பெற்றுள்ளன, இத்துடன் ஐ போன் SE, 6 எஸ் போன்ற மாடல்களும் இடம்பெற்றுள்ளன.

சாம்சங்கை பொறுத்தவரையில் சாம்சங் காலக்ஸி ட்ரெண்ட் லைட், கேலக்ஸி ட்ரெண்ட் 2, கேலக்ஸி எஸ் 2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கோர் மற்றும் கேலக்ஸி ஏஸ் 2 போன்ற சாம்சங் மாடல்களில் நவம்பர் 1ம் தேதியுடன் வாட்ஸ் அப் சேவை இயங்காது.

எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் எஃப் 7, ஆப்டிமஸ் எஃப் 5, ஆப்டிமஸ் எல்3 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 5, ஆப்டிமஸ் எல்5, ஆப்டிமஸ் எல்5 2, ஆப்டிமஸ் எல்5 டூயல், ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் நிட்ரோ ஹெச்டி மற்றும் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் ஆப்டிமஸ் எஃப்3க்யூ போன்ற எல்ஜி மாடல்கள் அடக்கம்.

சீனா நிறுவனமான ZTE மாடல்களில் ZTE கிராண்ட் எஸ் ஃபிளக்ஸ், ZTE வி 956, கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 மற்றும் ZTE கிராண்ட் மெமோ போன்ற மாடல்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது.

ஹூவாவே நிறுவனத்தின் ஆஸ்செண்ட் ஜி740, ஆஸ்செண்ட் மேட், ஆஸ்செண்ட் டி குவாட் எக்ஸ் எல், ஆஸ்செண்ட் டி1 குவாட் எக்ஸ் எல், ஆஸ்செண்ட் பி1 எஸ் மற்றும் ஆஸ்செண்ட் டி2 போன்ற மாடல்களில் வாட்ஸ் அப் இயங்காது.

சோனி எக்ஸ்பீரியாவின் மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோ எல், எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் போன்ற மாடல்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இது தவிர ஆல்காடெல், லெனோவோ மற்றும் இதர நிறுவன மாடல்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன.

மேற்கண்ட மாடல்களில் வாட்ஸ் அப் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது என்பதற்காக அந்த போன்களில் இனி வாட்ஸ் அப்பையே பயன்படுத்த முடியாது என அர்த்தம் கிடையாது.

இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கான அப்டேட் கிடைக்காது. பழைய வெர்ஷனையே தொடர்ந்து பயன்படுத்தலாம். குறிப்பிட்ட காலவரையறை வரைக்கும் அதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.