‘’ போடு தகிட தகிட ’’ வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட் இனி கொண்டாட்டம் தான்

whatsapp newupdate newfeaturewhatsapp
By Irumporai Feb 15, 2022 11:24 AM GMT
Report

வாட்ஸ் அப் தற்போது உலக அளவில் பிரபலமாக இருக்கும் சமூகவலைத்தளம் , நமக்கு பிடித்தவர்களுடன் நமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உபயோகமாக இருக்கும் சமூக வலைத்தளம் வாட்ஸ் அப் என்றே கூறலாம்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை கொடுத்து வருகிறது, தற்போது வாட்ஸ்அப்பை நிர்வகித்து வரும் பேஸ்புக் இன்ஸ்டாவில் இருப்பது போன்று புதிய அம்சங்களை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘’ போடு தகிட தகிட ’’  வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்  இனி கொண்டாட்டம் தான் | Whatsapp Update Meta Working On New Feature

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் கவர் போட்டோ வைக்கும் அம்சம் கொண்டுவரப்படவுள்ளது. இதுவரை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தான் கவர் போட்டோ வைக்க முடியும்.

இனி வாட்ஸ்அப்பிலும் கவர் போட்டோ வைக்கும்படியான அம்சத்தை விரைவில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது. முதல் கட்டமாக, இந்த வசதி வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட்களில் சாதாரண கணக்கு வைத்திருப்போருக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது