வாட்ஸ் அப் வேண்டவே வேண்டாம் - கொந்தளித்த 70 மில்லியன் பயனாளர்கள்

Facebook Telegram WhatsApp
By Thahir Oct 07, 2021 03:57 AM GMT
Report

வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரே நேரத்தில் திடீரென முடங்கின.

வாட்ஸ் அப் வேண்டவே வேண்டாம் - கொந்தளித்த 70 மில்லியன் பயனாளர்கள் | Whatsapp Telegram Facebook

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆப்ஸ்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதியடைந்தனர்.

முதலில் பிரச்னை ஏற்பட்டதும் பெரும்பாலானோர் தங்கள் செல்போனை ஆஃப் செய்து ஆன் செய்தனர். ஆனால் அதன்பின்னர் தான் தெரியவந்தது, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கின என்பது.

யூசர்கள் எதிர்கொண்ட இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியிருப்பதாக தெரிவித்தது.

சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆப்ஸ்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், ஒரே இரவில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்புகளை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்றே கூறலாம்.

வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த யூசர்கள், கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் யூசர்களாக மாறியுள்ளனர்.

இதுவரை 70 மில்லியன் புது யூசர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் பேசும்போது, கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது யூசர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர்.