உலகம் முழுவதும் தடைபட்டிருந்த வாட்ஸ் அப் சேவை சீரானது
உலகம் முழுவதும் தடைபட்டிருந்த வாட்ஸ் சேவை சீரடைந்துள்ளதால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் சேவை பாதிப்பு
மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் ஆப் சேவையை 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகில் உள்ள அனைவரும் பயன்படுத்தி வந்த வாட்ஸ் அப் செயலி சேவை திடீரென நண்பகலில் இருந்து தடை பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அவதியடைந்தனர்
வாட்ஸ் அப் செயலி மூலம் பல தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. தகவல் தொடர்புதுறையில் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12.45 மணியில் இருந்து வாட்ஸ் அப் செயலியின் சேவை தீடீரென தடைப்பட்டது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வந்தது.
வாட்ஸ் அப் சேவை தடைபட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் மட்டுமின்றி, நிறுவனங்களின் சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், மீண்டும் வாட்ஸ் சேவையானது சீராகியுள்ளது. இதையடுத்து பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.