வாட்சாப் Privacy சர்ச்சை: நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்
வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய ப்ரைவசி கொள்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே வாட்சாப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இதனை செயல்படுத்துவதை மே மாதம் வரை வாட்சாப் நிறுவனம் தள்ளிவைத்தது.
வாட்ஸ்அப்பின் இந்த புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து பல தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கொள்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பதிலளிகக் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் புதிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகள், பயனர்களின் தனியுரிமை கொள்கை ஆகியவை குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளன. வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி மற்றும் வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து குறிப்பிடுகையில், பயனரின் தனியுரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றார். உச்சநீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளிக்கையில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களின் எந்த வகையான தரவு பகிரப்படுகின்றன, எந்த வகையான தரவு பகிரப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தலைமை நீதிபதி போப்டே, ”பேஸ்புக் நிர்வகிக்கும் வாட்ஸ்அப்பிடம், 'நீங்கள் (வாட்ஸ்அப், பேஸ்புக்) 2-3 டிரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கும், ஆனால் மக்களின் தனியுரிமை அதைவிட மதிப்புமிக்கது. அதைப் பாதுகாப்பது நமது கடமை” என்றார்