வாட்சாப்பின் புதிய விதிகளை திரும்பப்பெற வேண்டும்: மத்திய அரசு கடிதம்

india whatsapp technology
By Jon Jan 20, 2021 03:03 PM GMT
Report

வாட்சாப் நிறுவனம் தன்னுடைய விதிகளில் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களுக்கு அனுமதி கொடுக்காத வாட்சாப் கணக்குகள் பிப்ரவரி 8-ம் தேதியோடு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பயனர்களின் தகவல்களை வாட்சாப் அத்துமீறி திருடுவதாக குற்றச்சாட்டுகள் எழ சிக்னல் மற்று டெலகிராம் போன்ற செயலிகள் பிரபலம் அடையத் தொடங்கின.

இந்நிலையில் இந்த மாற்றங்களை மூன்று மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக வாட்சாப் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது மத்திய அரசு வாட்சாப் நிறுவனத்திற்கு இந்த விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அதில் புதிய திருத்தங்களை வாட்சாப் நிறுவனம் திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்தியா வாட்சாப்பின் மிக முக்கியமான சந்தையாக உள்ளது.

இந்தியர்கள் அதிக அளவில் வாட்சாப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் தரவுகளை மதிக்க வேண்டும் எனவும் வாட்சாப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.