இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது - வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி
ஆன்லைன் கவுண்டர், ரிமைண்டர் என இரு வசதிகளை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்ஸ்அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவர தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக இரு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கவுண்டர்
வாட்ஸ்அப் குழுவில் எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர் என்பதை காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உங்களது இணைய இணைப்பு சரியாக இருந்து நீங்கள் ஓப்பன் செய்திருந்தால் நீங்கள் உள்ள குழுக்களில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது காட்டப்படும். இனி ஆன்லைனில் இருந்து கொண்டே மெசேஜை படிக்காமல் இருப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
அதே நேரம், பயனர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு ஆன்லைன் செயல்பாட்டை மறைக்கும் வசதியையும் அளிக்கிறது. ஆன்லைன் விசிபிலிட்டியை ஆப் செய்துவிட்டு, ஆன்லைனில் இருந்தாலும் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது.
மெசேஜ் ரிமைண்டர்
அடுத்ததாக மெசேஜ் ரிமைண்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக மெசேஜ் அல்லது கால் வரும் போது வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் வழங்கும். சிலருக்கு அதிகப்படியான மெசேஜ் வரும் போதோ அல்லது பிஸியாக இருக்கும் போதோ சிலரின் மெசேஜ்களை தவற விட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதுவே உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.
இதனை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் மெசேஜ் ரிமைண்டர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இந்த வசதி இருந்தது. நாம் பார்க்காத ஸ்டேட்டஸ்கள் முன்னணியில் இருக்கும். அதே போல் நீங்கள் வழக்கமாக உரையாடுபவர்களின் மெசேஜ்களை நீங்கள் திறக்காமல் வைத்திருந்தால் வாட்ஸ்அப் இது குறித்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பி நினைவு படுத்தும்.
இந்த இரு வசதிகளும் வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை முறையில் உள்ளது என்றும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.