வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம் - பயனாளர்கள் அவதி

facebook whatsapp instagram serverdown
By Petchi Avudaiappan Oct 04, 2021 04:32 PM GMT
Report

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். 

 உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே இரவு 9 மணியளவில் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 

இதனால் அதன் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் ட்விட்டரில் #serverdown என்ற ஹேஸ்டேக்கில் தங்களது பாதிப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.