#Update... இனி வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேட கஷ்டபட வேண்டாம்!

WhatsApp
By Sumathi Sep 11, 2022 02:32 PM GMT
Report

 வாட்ஸ் அப்பில் பழைய மேசேஜ்களை எடுக்க ஸ்க்ரோல் செய்ய வேண்டியதில்லை என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்

நாம் அதிகம் பயன்படுத்தும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய இரண்டுமே மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானவை. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இன்ஸ்டண்ட் மெசேஜ் சேவையை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது.

#Update... இனி வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேட கஷ்டபட வேண்டாம்! | Whatsapp Feature Update

எத்தனையோ மெசேஜ் ஆப் வசதிகள் இருந்தாலும், எண்ணற்ற மக்களின் விருப்பத்திற்கு உரிய தேர்வாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதில் மேலும், ஒரு புதிய அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது.

 புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேடி எடுக்க இதுவரை ஸ்க்ரோல் செய்ய வேண்டியிருந்தது. வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் நாம் இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக அப்டேட் கொடுக்கப்படவுள்ள

வாட்ஸ் அப்பில் குழு அல்லது தனி ஷேட்டில் கொடுக்கப்படவுள்ள சர்ச் பாக்ஸில் தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதிக்குரிய மெசேஜ்கள் ஸ்கிரீனில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்டேட் WhatsApp beta iOS 22.0.19.73-வானது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.