சாதி பிரச்சனையால் பதவியேற்க முடியாமல் திணறும் தாலிபான்கள் - என்ன நடக்கிறது?
ஆப்கானிஸ்தானில் தற்காலிக அரசை அமைத்துள்ள தாலிபான் அமைப்பினர் இதுவரை பதவியேற்க முடியாமல் திணறி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். அங்கு தாலிபான் அமைப்பினர் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் செயல் பிரதமராகவும், முல்லா அப்துல் கனி பரதர் துணை செயல் பிரதமராகவும் உட்பட சில பதவிகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனிடையே அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்ததன் 20ஆம் ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11 ஆம் தேதி தாலிபான்கள் அரசு பதவி ஏற்க உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்த தாலிபான்கள் விரைவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில் தாலிபான்களுக்குள் சாதி பிரச்னை நிலவி வருவதால் புதிய அரசு பதவி ஏற்பு நிகழ்ச்சி தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் பஷ்தோ, பார்சி மற்றும் துருக்கி ஆகிய மூன்று மொழிகள் பேசப்படும் நிலையில் பஷ்தூன், தஜிக், உஸ்பெக் மற்றும் ஹஸாரா ஆகிய நான்கு பிரிவுகள் உள்ளன.இதில்
தங்கள் சாதி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வகையில் தாலிபான் அமைப்பினரிடையே கடும் அதிகாரப் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் தற்காலிக அரசு அமைத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் தலிபான்கள் திணறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.