விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி தர என்ன பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன பயன் - பிரேமலதா!

Vijay Tamil nadu Premalatha Vijayakanth
By Swetha Sep 05, 2024 01:30 PM GMT
Report

மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.


பிரேமலதா

அப்போது அவர், “அமெரிக்காவில் முதல்வர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். இப்படி சுற்றுலா பயணமாக இல்லாமல் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கெனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர்,

விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி தர என்ன பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன பயன் - பிரேமலதா! | Whats Problem In Giving Perimision For Vijay Confs

இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பது தெரியவில்லை.மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும். அதற்கு மாற்றாக தமிழகத்திலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாகப் பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும்.

பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்; பிரச்சார மேடையில் கண் கலங்கிய பிரேமலதா!

என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்; பிரச்சார மேடையில் கண் கலங்கிய பிரேமலதா!

விஜய் மாநாடு

பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்கள் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது. விஜய்யின் ‘தி கோட்’ படத்துக்கு வாழ்த்துக்கள்.

விஜய்யின் மாநாட்டுக்கு அனுமதி தர என்ன பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன பயன் - பிரேமலதா! | Whats Problem In Giving Perimision For Vijay Confs

அவரது கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?

யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. முதல்வர் தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் பல கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்தப் பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.