ஹிஜாப் விவகாரம்; ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பது அவருடைய விருப்பம் - ராகுல் பளீச் பதில்!
மாணவி ஒருவரது ஹிஜாப் குறித்த கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளர்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகாவில், பாஜக ஆட்சியில் உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் பெரியளவில் வெடித்தது. இதன் பிறகு பள்ளி கல்லுரியில் ஒரே மதிரியான சீருடைகள்தான் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறி, பா.ஜ.க அரசு பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்தது.
கர்நாடக உயர் நீதிமன்றமும் தடை உத்தரவை உறுதிசெய்தது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன்பிறகு,மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி அடைந்த நிலையில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்தது காங்கிரஸ்.
போட்டித் தேர்வுகளின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தது.
ராகுல் பதில்
இந்நிலையில், ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்கிற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அங்குள்ள லிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், ”ஒரு பெண் என்ன அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் அனுமதிக்க வேண்டும். இதுவே என்னுடைய கருத்து. நீங்கள் என்ன அணிகிறீர்கள் என்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
எனவே, என்ன அணிய வேண்டும் என்பது உங்களின் முடிவு. மாறாக, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.