இந்த 4 நிறங்களில் சாலை மைல்கல் இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
சாலை மைல்கல்லில் உள்ள நிறங்களுக்கான அர்த்தம் பற்றிய தகவல்.
சாலை மைல்கல்
செல்போன், கூகிள் மேப், போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது சாலை மைல்கல் தான். இன்றைய காலத்திலும் மைல்கல் பார்த்து செல்வோர் இருக்கிறார்கள்.
இந்த மைல்கல்லில் அடுத்து என்ன ஊர், எத்தனை கிலோ மீட்டர், நாம் பயணிப்பது என்ன சாலை போன்றவற்றை உணர்த்துகிறது. இந்த மைல்கல்லில் 4 நிறத்தில் மட்டும் இருக்கிறது.
என்ன அர்த்தம்?
அதில், மஞ்சள் நிறம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் இருந்தால் தேசிய நெடுஞ்சாலை என்பதை உணர்த்துகிறது. பச்சை நிறம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் இருந்தால் மாநில நெடுஞ்சாலை என்பதை குறிக்கிறது.
நீலம் மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் மாவட்ட நெடுஞ்சாலை என்பதை உணர்த்துகிறது. மேலும், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம் மைல்கல் கிராமப்புற சாலை என்பதை குறிக்கிறது.