ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் ஏன் இவ்வுளவு அவசரம்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைதான நிலையில் அவரது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இதனையடுத்து அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து 20 நாள்களாக தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரை வரும் 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறையில் தனக்கு A க்ளாஸ் வசதி மட்டும் வேண்டுமென்று அவர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை உயர் நீதிமன்றம் நிகாரித்தது. தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தபோது, “ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் அவர் ஏன் இவ்வளவு அவசரமாக கைது செய்யப்பட வேண்டும்.
அவருக்கு தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் கைது செய்ய என்ன அவசரம். இது அரசியல் உள் நோக்கம் கொண்ட வழக்கா என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.