பிபோர்ஜாய் புயல் : மீன்வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல், காரணமாக மீனவர்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் புயல்
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்நிலையில், இன்றும் நாளையும் மீனவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.