ஒரே நாளில் ரூ.2.5 லட்சம் கோடி இழந்த எலான் மஸ்க் -உலக நாடுகள் அதிர்ச்சி- என்ன காரணம் ?
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்புக்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகின் முன்னனி நிறுவனங்களின் உரிமையாளார் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்ற டிரம்ப் அரசின் திறன் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அமெரிக்க அரசியலில் மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சியடையும் வகையில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.
இழப்பு
அதாவது ஞாயிற்றுக் கிழமை 28.77 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு திங்கள் கிழமை 26.24 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.மேலும் மூன்றே மாதங்களில், 11.50 லட்சம் கோடியை எலான் மஸ்க் இழந்துள்ளார்.
டெஸ்லா உள்ளிட்ட அமெரிக்காவின் மகத்தான ஏழு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஆப்பிள், மைக்ரோசாப்ட், என்விடியா, கூகுள்-ஆல்பாபெட், அமேசான் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்தன.