பெரிதும் எதிர்பார்த்து வெற்றி பெறாமல் போன விஜய் படம் - என்ன காரணம்?
நடிகர் விஜய் நடித்த புலி படம் ஏன் வெற்றி பெறாமல் போனது என அப்படத்தின் ஒளிப்பதிவாளர் நட்டி நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்த படங்கள் அனைத்திற்கும் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படும் அவர் நடித்த படங்களில் சில பெரிதும் எதிர்பார்த்து வெற்றி பெறாமல் போய்விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களை பெரிதும் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றமளித்தது.
அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான புலி படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளை இயக்கிய சிம்புதேவனும் விஜய்யும் ஒரு பேண்டஸி படத்தில் இணைந்தது அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் குழந்தைகளை இப்படம் பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நடிகர் நட்டி ஏன் படம் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி புலி படம் குழந்தைகளுக்காகவும் குடும்ப ரசிகர்களுக்காகவும் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் படத்தை ப்ரமோட் செய்யும் போது விஜய்யின் மற்ற படங்களைப் போலவே பிரமாண்டமாக ப்ரமோட் செய்ததால் பெரிதும் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது என தெரிவித்துள்ளார்.