வெயில் காலத்தில் ஏற்படும் ஒற்றை தலைவலியை தடுக்க இதோ எளிய வழி...!

By Petchi Avudaiappan Apr 25, 2022 07:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் பிரச்சனை என்றாலு இதனை அனைவராலும் எளிதாக தாங்கி கொள்ள முடியாது. சுமார் 4 மணி முதல் 72 மணி வரை நீடிக்கும் இந்த ஒற்றை தலைவலியின் போது நோயாளிகள் குமட்டல், வாந்தி, லைட் சென்சிடிவ் மற்றும் சவுண்ட் சென்சிடிவ் ஆகியவற்றாலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு இவ்வகை தலைவலி அதிகம் ஏற்படுகிறது. க்ளோபல் டிசீஸ் பர்டன் (Global disease burden) ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலி தான் உலகில் மூன்றாவது பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். 

காரணங்கள்

தூக்கமின்மை, சரியாக உணவு உண்ணாமல் இருப்பது, அதிகப்படியான உடற்பயிற்சி, உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தம், பிரகாசமான விளக்குகள், உரத்த ஒலிகள், குறிப்பிட்ட வாசனை, ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய், நீர்ப்போக்கு, காஃபின், சாக்லேட், சீஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை சில உணவுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டும் முக்கிய காரணிகளாகும். 

இதனை தடுக்க...

  • கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். தினமும் 2.5 - 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் என்பதை உணருங்கள்.
  • தொப்பிகள் நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பதையும், கூலர்ஸ் பிரகாசமான வெளிச்சங்களை தவிர்ப்பதையும் உறுதி செய்வதால் இதனை பயன்படுத்தலாம். 
  • தூக்கம் மற்றும் உணவுக்கான அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும். 
  • கூடுமானவரை வெயிலால் உடலில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது மற்றும் வெளியே செல்ல முயற்சியுங்கள். 
  • ஒற்றை தலைவலி வந்தால் ஓய்வெடுக்க அமைதியான, இருண்ட இடத்தை கண்டுபிடிக்கவும். பின்  போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், உங்கள் தலையில் கோல்ட் கம்ப்ரெஸ்-ஐ வைக்கவும்.
  • மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பாராசிட்டமால், டிக்ளோஃபெனாக் அல்லது நாப்ராக்ஸன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.