நடிகர் மனோ பாலா உயிரிழப்புக்கு காரணம் இது தானா? கதறும் குடும்பத்தினர்
பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா இன்று அவரது வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவில் அறிமுகம்
நடிகர் கமல் பரிந்துரையால் 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பின்னர் ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
பின்னர் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, சிறைப்பறவை உள்ளிட்ட படங்களை இயக்கினார். பிதாமகன், சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை, கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
கல்லீரல் பாதிப்பால் காலமானார்?
மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
அவரின் திடீர் மறைவு குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கண்ணீர் விட்டு வருகின்றனர் அவரின் உறவினர்கள்.