ரெட் அலர்ட் என்பது என்ன? எதற்காக இந்த எச்சரிக்கை?
கடந்த 2015ம் ஆண்டை போலவே தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்பது என்ன? எதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரெட் அலர்ட்டை போன்றே, வானிலை மையம் ஆம்பர் அலர்ட், யெல்லோ அலர்ட், க்ரீன் அலர்டை வழங்குகிறது.
இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும், பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும், மேலும் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.
ஆம்பர் அலர்ட்- வானிலை மோசமடைய வாய்ப்புள்ளதால், சாலை- மின் இணைப்பு துண்டிக்கப்படும், தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும், மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
யெல்லோ அலர்ட்- வானிலை மோசமாக வாய்ப்புள்ளது, போக்குவரத்து பாதிக்கப்படலாம், வானிலையில் சாதகமாக இல்லாததால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
க்ரீன் அலர்ட்- எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதையே இது குறிக்கும்.