ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன?

Pakistan India Operation Sindoor
By Karthikraja May 10, 2025 07:13 AM GMT
Report

இந்தியா மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸ் என பாகிஸ்தான் பெயரிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது. 

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? | What Is Mean Pakistan Operation Bunyan Al Marsous

சிந்தூர் என்பது ஹிந்தியில் சிவப்பு நிற பொட்டை குறிக்கும். ஹிந்து மதப்படி கணவரை இழந்த பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள மாட்டார்கள்.

பஹல்காம் தாக்குதலில் 26 ஆண்கள் கொல்லப்பட்டு, அவரது மனைவிகள் பொட்டை இழந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவமும் இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் ட்ரோன் மற்றும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்ஷன் சக்ரா, மூலம் பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வானிலே தாக்கி அழித்து வருகிறது.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ்

பாகிஸ்தான் இந்தியா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என பெயரிட்டுள்ளது. 

operation bunyan al marsous

புன்யான் மர்சூஸ் என்பது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலில் உள்ள ஒரு அரபு வசனம் ஆகும். இதற்கு உறுதியான அமைப்பு என பொருள்படும். 

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? | What Is Mean Pakistan Operation Bunyan Al Marsous

உருகிய ஈயத்தால் வேயப்பட்ட உறுதியான சுவரைப் போல அல்லாஹ் தன் பாதையில் போரிடுபவர்களை நிச்சயமாக நேசிக்கிறான் என குரானில் உள்ள இந்த வாசகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.