சந்திராஷ்டமம் என்றால் என்ன? இதனால் மனதில் என்னென மாற்றங்கள் ஏற்படும்?

Astrology World
By Swetha Dec 24, 2024 07:30 AM GMT
Report

சந்திராஷ்டமம் ஏற்படுத்தும் விளைவுகளை குறித்து விவரமாக பார்க்கலாம்.

சந்திராஷ்டமம்   

அன்றாட வாழ்க்கையில் காலண்டர் பாக்கும் பழக்கம் இருப்பவர்கள் நிச்சயம் ராசிப் பலனை பார்க்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி பார்த்தால் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இதனால் மனதில் என்னென மாற்றங்கள் ஏற்படும்? | What Is Chandrashtamam And The Changes That Happen

ஆனால் அதை பற்றிய விவரம் தெரியாததால் பலர் அதனை பொருட்படுத்தமாட்டார்கள். அதுவே ஜாதகத்தை பார்த்தால் மிக முக்கியமாக இருப்பது லக்னம் தான். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.

அந்த பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். அதாவது, சந்திரன் எந்த வீட்டில் உள்ளாரோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திராஷ்டமம்=அஷ்டமம்+ சந்திரன் எனப்படுகிறது. ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம்.

குறிப்பாக பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.

இந்த ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் - மிக கவனமா இருக்கனுமாம்! பெரும் ஆபத்தே நிகழும்

இந்த ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம் - மிக கவனமா இருக்கனுமாம்! பெரும் ஆபத்தே நிகழும்

மாற்றங்கள் 

எனவே இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்கள் செய்வதை தவிற்த்திட வேண்டும். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்,பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இதனால் மனதில் என்னென மாற்றங்கள் ஏற்படும்? | What Is Chandrashtamam And The Changes That Happen

வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புது முயர்ச்சிகளை செய்வது தடுத்திடுவது நல்லது. புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள், ஏனென்றால் சந்திராஷ்டமம் அன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகிறது. ஏனெனில் சந்திரன் மனோகாரகன்,

மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும். இதனால் தான் 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டமம் எனப்படுகிறது. இது போன்ற நாட்களில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது.