விமானம் விபத்தில் சிக்கினால் ஏன் கருப்பு பெட்டி தேடப்படுகிறது தெரியுமா?
பொதுவாக ஒரு விபத்து நடந்தால் அங்கு கைப்பற்றப்படும் தடயங்கள், நேரில் பார்த்தவர்களை அளிக்கும் வாக்கு மூலங்கள் மற்ற சூழல்களை வைத்துதான் விபத்திற்கான காரணங்கள் கண்டறியப்படும்.
கருப்பு பெட்டி என்றால் என்ன?
அதுவே ஒரு விமானம் விபத்துக்குள்ளானால் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடுவதுதான் முதல் வேலையாக இருக்கும். அப்படி என்ன இருக்கிறது இந்த கறுப்புப்பெட்டியில் சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்
கருப்பு பெட்டி என்றழைக்கபடும் இவற்றின் உண்மையான நிறம் ஆரஞ்சி ஆகும்.காரணம் மற்ற நிறங்களை விட பிரகாசமாக தெரியும் என்பதால் விபத்துப்பகுதில் இருந்து எளிமையான முறையில் கண்டுபிடிப்பதற்க்காக உருவாக்கப்பட்டது.

விமானத்துறையை சேர்ந்தவர்கள் இதனை "பிலைட் டேடா ரெக்காடர்" என்று அழைப்பர் .விமானத்தில் நடக்க கூடிய அனைத்து விதமான தகவல்களையும் சேமிக்க கூடிய ஒரு பெருளாகும்.
எதற்கு விமானத்தில் கருப்பு பெட்டி?
பொதுவாக விமானத்தில் எப்.டி.ஆர் மற்றும் சி.வி.ஆர் என்ற 2 கறுப்புப்பெட்டிகள் இருக்கும் எப்.டி.ஆர் விமானத்தின் வால்பகுதில் பொருத்தப்பட்டு இருக்கும்.
விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், எரிபொருள் அளவு போன்ற பல விவரங்களை பதிவு செய்யும். சி.வி .ஆர் எனப்படும் காக் பிட் வாய்ஸ் ரெக்காடர் விமானியின் அறையில் இருக்கும் இது விமானிகளின் உரையாடல் மற்ற செயல்பாடுகளை மிக துல்லியமாக பதிவு செய்யும்.
மேலும் 25மணி நேரத்திற்கு மேல் தகவல்களை பதிவு செய்யும் வகையிலும் நெருப்பு தண்ணீர் போன்ற பேராபத்துகளில் கூட அழிக்க முடியாத வகையிலும் பல அடுக்குகளை கொண்ட யுரேனியம்மற்றும் ஸ்டைன்லஸ் சிலால் உருவாக்க பட்டதாகும் .
விமானத்தின் ஓட்டுமொத்த கட்டுப்பாடுகளையும்,தகவல்களையும் சேமிப்பதால் தான் புலனாய்வு பிரிவினருக்கு கருப்புப்பெட்டி மிகமுக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது