படத்துல நடிக்குறத விஜய் நிறுத்திட்டு அரசியல் பேசுனா என்ன பண்ணுவீங்க..? சீமான் கேள்வி

Vijay Naam tamilar kachchi Tamil nadu Seeman Leo
By Karthick Oct 02, 2023 10:45 AM GMT
Report

விஜய் நடிப்பில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சீமான் தொடர்ந்து ஆளும் திமுக அரசிற்கு பல கேள்விகளை முன்வைத்து வருகின்றார்.

சீமான் கேள்வி

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் விஜய் படத்தின் பாட்டு வெளியிடவிடாமல் தடுக்க வேண்டிய காரணம் என்ன? என்றும் திமுகவுக்கு என்ன வந்துச்சு? என வினவினார். 

what-if-vijay-stop-acting-nd-talks-politics-seeman

குறிப்பிட்ட அளவில் தான் ரசிகர்கள் வரவேண்டும் என கூறும் போது, அவர்கள் மாநாடு நடத்தும் போது இவ்வளவுதான் தொண்டர் வரவேண்டும் என்று சொல்வார்களா? என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்கு இவ்வளவுதான் தொண்டர்கள் வரவேண்டும் என கூறுவார்களா? என்றார்.

ரஜினிக்கு முடியும் விஜய்க்கு முடியாதா..?

அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை இருக்கும், வேலை செய்யும், ஆனால் ரகுமானுக்கும் விஜய்க்கும் கொடுக்க முடியாதா? என கட்டமாக அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பிய சீமான், அதே அரங்கத்துல முன்னர் பாட்டு வெளியிடும் போது ஏன் தடை விதிக்கவில்லை என்று கேட்டார்.

தற்போது விஜய் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற காரணத்தால் நெருக்கடி அளிக்கிறீர்கள் என்று கூறி அங்கு விஜய் ஏதேனும் அரசியலாக பேசுவார் என்பதால் நெருக்கடி தருகிறார்கள் என்றார். மேலும், பாட்டையே வெளியிட விடாதவர்கள் படத்தை எப்படி வெளியிட விடுவார்கள் என்ற சீமான், இப்பொது அரசியல் பேசாமல் இருக்கும் விஜய், பின்னர் ஒரு வருடத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் பேசின என்ன பண்ணுவீங்க?என்று தொடர் கேள்விகளை முன்வைத்தார்.