உங்களுக்கு மட்டும் தான் கை இருக்கா..எனக்கு அடிக்க தெரியாதா? காவிரி விவகாரத்தில் கொந்தளித்த சீமான்
காவிரி விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அது குறித்து நாம் தமிழர் சீமான் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
இன்று நடைபெற்ற காவிரி ஒழுக்காற்று கூட்டத்தில், 161 தாலுகாக்களில் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுவதால், இனிமேலும் காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை 5,000 கன அடியிலிருந்து மேலும் குறைக்கப்பட்டு நாளை மறுநாள் முதல் 3000 கன அடியாக திறந்து விட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொந்தளித்த சீமான்
பெங்களுருவில் சில கன்னட அமைப்பினர் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தும், தொந்தரவுகள் செய்து வருவதாக காலை முதலே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், அங்கு வாகனங்களை இயக்கி வரும் தமிழக மக்கள் மீது கற்களை வீசி வருவதை குறிப்பிட்ட சீமான், அவர்களுக்கு மட்டும் தான் கை இருக்கின்றதா? தங்களுக்கு இல்லையா? என கோபத்துடன் கேள்வி எழுப்பி, எத்தனை ஆண்டுகளுக்கு இவ்வாறு பொறுமையுடன் இருப்பது என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இவ்வாறு நடந்துகொள்பவர்கள் யார் மீதும் தற்போது வரை எந்தவித வழக்கோ, FIR போன்றவை பதியபடவில்லை என கூறி, இவ்வளவு பிரச்னைகளை வைத்து கொண்டு எதற்காக ஒரே நாடாக இருக்கவேண்டும் என வினவினார்.