ரொனால்டோவாக மாறிய விராட் கோலி - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புதிய தகவல்
போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக தான் மாறினால் என்ன செய்வேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்தாண்டு சில மாதங்கள் முன்பு 3 விதமான கிரிக்கெட்டுகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் தற்போது பேட்ஸ்மேனாக மட்டுமே ஐபிஎல் தொடரிலும், சர்வதேச தொடரிலும் விளையாடி வருகிறார்.
இதனிடையே பெங்களூரு அணிக்கான போட்டோஷூட்டில் பங்கேற்ற விராட் கோலி தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என தெரிவித்தார். அப்போது அவரிடம் ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்தவுடன் நீங்கள் ரொனால்டோவாக மாறினால் முதலில் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கோலி, அப்படி மாறினால் முதலில் எனது மூளையை பரிசோதனை செய்து பார்ப்பேன். அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பது பற்றி ஆராய்ச்சி செய்வேன் என தெரிவித்துள்ளார்.