மரணத்தின் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும்?ஆய்வு ரிப்போர்ட் இதோ..!
மரணத்தின் போது மூளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளை
மரணத்தின் போது உடலில் என்ன நடக்கிறது என ஆய்வுகள் உலகெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மரணம் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எந்த தொழில்நுட்பத்தாலும் வெல்ல முடியாததாக உள்ளது.
ஒரு மனிதனுக்கு இயற்கையாகவோ அல்லது எதிர்பாராதவிதமாக மரணம் ஏற்பட்டால் முதலில் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது. அதன் பிறகு உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் நின்றுவிடுகிறது. ஆனால் மரணத்தின் போது மூளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என சீந்தித்துள்ளீர்களா?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இறப்பவர்களின் உறவினர்கள் அனுமதியுடன்,மூளை செயல்பாடுகளைக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மருத்துவர்கள் ஆச்சரியகரமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
செயல்பாடு
ஆய்வின்படி, மூளையின் அணுக்களும், நரம்பணுக்களும் இதயத் துடிப்பு நின்ற பிறகும்கூட வேலை செய்ததை அவர்கள் கண்டறிந்தனர். சத்தத்தைக் கேட்பது, ஒளியை உணர்வது உள்ளிட்டவற்றை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அதில் ,காமா, டெல்டா, தீட்டா, ஆல்பா மற்றும் பீட்டா அலைவுகள் உள்ளிட்ட நரம்பியல் அலைவரிசைகளில் அவர்கள் செயல்பாட்டைக் கண்டறிந்தனர்.